Annapoorana Medical College and Hospitals (AMCH), established in 2011 under the
Vinayaka Mission’s Research Foundation (VMRF) Trust, is a leading institution dedicated to
excellence in medical education, healthcare, and research. Affiliated with The Tamil Nadu
Dr. MGR Medical University (TNDRMGRMU), AMCH has built a reputation for producing
competent healthcare professionals. Initially approved by the Medical Council of India
(MCI), the institution now operates under the guidelines of the National Medical Commission
(NMC), ensuring it remains aligned with the latest standards in medical education.
Located on a sprawling 45-acre eco-green campus in Salem, Tamil Nadu, AMCH provides an
ideal environment for both academic and professional growth. The institution offers
undergraduate (MBBS) and postgraduate (MD) programs, with specializations in Anatomy,
Physiology, Biochemistry, Microbiology, and Pharmacology. These postgraduate courses are
designed to provide in-depth knowledge and foster expertise in foundational medical
sciences, enabling students to contribute significantly to both clinical practice and research.
AMCH comprises eight pre- and para-clinical departments and thirteen clinical departments,
all supported by a team of highly qualified faculty and state-of-the-art facilities. The campus
is equipped with modern lecture halls, well-equipped laboratories, skill development centers,
and a comprehensive library offering a wide range of books and digital resources. The
institution adheres to the competency-based medical education framework mandated by the
NMC, ensuring that students receive a holistic education through a blend of theoretical
knowledge, practical training, and research.
The teaching hospital, with 680 beds, serves as the cornerstone of clinical training. The
hospital includes 50 intensive care beds, a modular operation theatre complex, a cardiac
catheterization laboratory for interventional cardiology, and four dialysis machines catering
to renal patients. There are plans underway to establish a cardio-thoracic theatre, which will
further enhance the hospital’s ability to manage complex surgical cases. These advanced
facilities provide postgraduate students with hands-on training in diverse clinical scenarios,
allowing them to develop critical skills in patient care and surgical procedures.
AMCH’s diagnostic services are of the highest standard, featuring an automated central
laboratory and an NABL-accredited molecular laboratory. The radiology department is
equipped with mammography, CT scanning, and MRI technology, ensuring accurate
diagnostics for better treatment outcomes. During the COVID-19 pandemic, the molecular
laboratory played a vital role in providing timely and reliable diagnostics.
The institution is committed to serving the community by providing affordable, high-quality
healthcare, particularly to underserved and rural populations. AMCH is empanelled under the
Chief Minister’s Comprehensive Health Insurance Scheme, ensuring that advanced medical
care is accessible to economically disadvantaged individuals.
Aligned with the vision of the National Medical Commission (NMC), AMCH integrates
innovative teaching methodologies and skill-based training into its curriculum. The
introduction of postgraduate courses marks a significant milestone in the institution’s
commitment to producing specialized medical professionals capable of addressing complex
healthcare challenges.
With a strong focus on academic excellence, patient care, and community service,
Annapoorana Medical College and Hospitals continues to make a significant contribution to
the field of medical education and healthcare delivery in Tamil Nadu.
" நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் "
- குறள் : 948, அதிகாரம்: மருந்து
அன்னபூரணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 2011 ஆம் ஆண்டு
விநாயகா மிஷன் ஆராய்ச்சி மற்றும் பல்கலைக் கழக குழுமத்தால் தரம் வாய்ந்த
மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூக நலன் வழங்கும் நோக்கத்தோடு
தொடங்கப்பட்டது. இந்திய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டு தமிழ் நாடு
டாக்டர். எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தின்கீழ் மனித நேயத்துடன்
எச்சூழலிலும் செம்மையாக பணியாற்றக் கூடிய சிறந்த மருத்துவர்களை உருவாக்கிக்
கொண்டிருக்கின்றது.
தற்பொழுதுள்ள தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படியும் கால
சூழலுக்கேற்பவும், மருத்துவக் கல்வியில் “கற்றல், கற்பித்தல்” பணியை-படித்தல்,
கேட்டல், கற்றல், சிந்தித்தல், பயின்றதை பேராசியரின் மேற்பார்வையில் பயிற்சி
கொள்ளுதல், பெற்ற திறமையை தக்க நேரத்தில் தன்நம்பிக்கையோடு
நோயாளிகளின் நலம் காக்க பயன்படுத்துதல், போன்ற உன்னத நோக்கங்களுடன்
தகுதி வாய்ந்த மருத்துவர்களை உருவாக்கும் உன்னத பணியைச் செய்து வருகிறது.
இக்கல்லூரி, தமிழ் நாட்டின் சேலம் மாவட்டத்தில் கிராமப் புறத்தில் பசுமை நிறைந்த
மாசற்ற இயற்கை சூழலில், 45 ஏக்கர் நிலப்பரப்பில் கல்லூரி, மருத்துவமனை மற்றும்
விடுதிகள் ஆகியன அனைத்தும் ஒரே வளாகதில் அமைந்திருப்பதால், மருத்துவக்
கல்வியிலும் மருத்துவப் பணியிலும் எங்கள் கல்லூரி, மாணவர்கள் சிறந்து விளங்க
வாய்ப்பளிக்கின்றது.
இளநிலை மருத்துவப் படிப்புடன், உடற்கூறு இயல் துறை, உடல் இயங்கு இயல்
துறை, உயிரியல் ரசாயனம், மருந்தியல் மற்றும் நுண் நோய்க் கிருமி இயல் துறை
ஆகிய 5 துறைகளில் முதுகலை பட்டப்படிப்பு வழங்கி வருகின்றது. இம் முதுகலைப்
படிப்புகள் கல்லூரியின் முன்னேற்றப் பாதையின் மைல் கல்லாகத் தெரிகின்றன.
முதுகலை பட்டப்படிப்பில் அடிப்படை மருத்துவத் துறை பாடங்களில் ஆழ்ந்த அறிவும்,
தெளிவும் பெற்று, சிந்திக்கும் ஆற்றலும், ஆராய்ந்து பகுத்தறிவு பெறும் திறமையும்,
பயின்று பெற்ற வல்லமையை மருத்துவ பணியிலும், ஆராய்ச்சி பணியிலும்
பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு பயிற்சி பெறுகின்றனர்.
இக்கல்லூரியில் அடிப்படை மருத்துவப் படிப்பு சார்ந்த 8 துறைகளும், மருத்துமனை
மருத்துவம் சார்ந்த 12 துறைகளும் என, மொத்தம் 20 துறைகள், அனுபவம் மிக்க
பேராசிரியர்களால் மருத்துவக் கல்வி, நோய்த் தடுப்பு, நோய்க்கு மருந்து, நோய்
தீர்க்கும் முறை, மற்றும் நோயாளியின் மறுவாழ்வு என, பல்வேறு கோணங்களில்
இளம் மருத்துவ மாணவர்கள் பயிற்றுவிக்கப்படுகின்றனர்.
விசாலமான விரிவுரைக்கூடங்கள், எண்ணிலா பாடப் புத்தகங்கள், இந்திய மற்றும்
மேலை நாடுகளின் ஆராய்ச்சி இதழ்கள், வலைதளத்தில் தேடுதலுக்காக
கணினிகளுடன் கொண்ட மாபெரும் மைய நூலகம்- காலை 8 மணி முதல் மாலை 8
மணிவரை தடையிலா அருகலை (Wifi) வலைதள தேடல் வசதிகளோடு உள்ளது.
மாணவர்களுக்கு பாடம் சார்ந்த நவீன பரிசோதனைக் கூடங்கள், செய்முறையில்
பயின்று, செயல்திறனை வளர்க்கும் செய்முறைக் கூடமும், மனித உரு
மாதிரிப்படிவங்களுடன் (Mannequins) உள்ளன.
மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனை வளாகத்திற்குள், 690 உள் நோயாளி படுக்கை
வசதியும், 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவும், இருதய வடிகுழாய்
ஆய்வகம் மற்றும் சிகிச்சை பிரிவும் (Cath Lab), சிறு நீரக கலவை பிரிக்கும் பிரிவும், 24
மணி நேர நவீன தானியங்கி பரிசோதனை கூடமும் இருக்கின்றன. மேலும் (NABL)
தரச்சான்றிதழ் பெற்ற நுண்ணணு (MOLECULAR LAB) பரிசோதனைக் கூடமும்
இருப்பதனால், உலகளாவிய COVID-19 தொற்று காலத்தில், குறித்த நேரத்தில்
தொற்றினை உறுதி செய்து சிறப்பான சேவையை எங்கள் மருத்துவமனை செய்தது.
நுண்கதிர் (X-Ray) பிரிவில் சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ., மார்பகக் கட்டிகள் கண்டறியும்
உபகரணங்களும் உள்ளன. இவ்வசதிகளால் இளங்கலை, மற்றும் முதுகலை பயிற்சி
மாணவர்கள், நோயும் நோய்க்கான காரணமும் அறிந்து- தக்க முதலுதவி, அவசர
சிகிச்சை, அறுவை சிகிச்சை முறைகளை அளித்து, நோயாளியின் மனநிலையோடு
ஒன்றி, சரியான மருந்தும், சிகிச்சையும் ஆராய்ந்து அறிந்து, எத்தகைய மாறுபட்ட
சூழலிலும் சூழலுக்கேற்ப கைத்திறனை மேம்படுத்தும் வல்லமையும் மாணவர்கள் பெற
தொடர்ந்து வாய்ப்பளிக்கின்றது.
கல்லூரியும் மருத்துவமனை வளாகமும், புறநகர் கிராமப்புற சூழலில்
அமைந்திருப்பதால், கிராமப்புற ஏழை எளிய, வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள
அனைவருக்கும், முறையான மற்றும் தரமான மருத்துவச் சேவையை வழங்கி, தமிழக
முதலமைச்சரின் ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் சேவையை
வழங்குகிறது. இளங்கலை மருத்துவ மாணவர்கள் ஒவ்வொருவரும், தலா 5
குடும்பங்களைத் தத்தெடுத்து, வருடத்திற்கு 9 முதல் 10 முறை அவர்கள் இல்லம் தேடிச்
சென்று, உடல் நலனை கண்காணிக்க, தேசிய மருத்துவ ஆணையத்தின்
வழிகாட்டுதலின்படி, நலப் பணியைச் செய்து வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம்,
எங்கள் கல்லூரியினால் 3,000 குடும்பங்கள் இதுவரை பயனடைந்து வருகின்றனர்.
எங்கள் கல்லூரி மருத்துவ மாணவர்களுடைய கற்கும் திறன் மேம்பட, பல்வேறு
உத்திகளைக் கையாண்டும், கல்லூரியைச் சுற்றியுள்ள மக்களுடைய நல்வாழ்விற்கு
மருத்துவப் பணியையும் செய்து, மாநில மற்றும் மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்கள்
மக்களுக்கு போய்ச் சேர்வதில் அன்னபூரணா மருத்துவக் கல்லூரி மற்றும்
மருத்துவமனை முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்றது.